Showing posts with label fun. Show all posts
Showing posts with label fun. Show all posts

Tuesday, January 26, 2016

சூர்யா சாருக்கு நன்றி - பசங்க 2 விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை சந்திகுறேன், முதலில் நம்ம சூர்யா சாருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன், எனொண்ட பதிவை விட்டு பிரிந்து இருந்த என்னையே தம்பி நீ பதிவு எழுதணும் எண்டு துண்டி விட்டவர் நம்ம பசங்க ஹீரோ சூர்யா. :) 



நாம என்னண்ட நாம உண்டு நம்ம பாடு உண்டு எண்டு எல்லா நல்ல/மொக்கு படத்தை பாத்து சந்தோசமா இருந்தமைய, எப்ப பசங்க2 பாதமோ அண்ணைக்கு தொடங்கிசைய இந்த மன அழுத்தம் எப்பேபட்டவது  இந்த பதிவை போட்டுடனும் எண்டு.

பசங்க ஒண்ணை பாத்து குலுங்கி குலுங்கி சிரிச்ச இந்த சிங்கத்தை "நீங்களும் வெல்லாம் ஒரு கோடி, ஆர் யு ரெடி" எண்டு சொல்லி சொல்லியே சாய்சுபுட்டாரு நம்ம ஹீரோ. ஒரே வர்தைஜில சொல்லன்னுமேண்ட, சிறுசுக சுட்டி புன்னகைக்குள் ஒரு வேற்று கிரகவாசி கொலைவெறி. 

நண்பர்களே இந்த பதிவு எல்லாம் ஒரு காமெடிக்கு தான், யாரும் சீரிஸ்சா  எடுத்துகாதிங்க. :P


Monday, December 23, 2013

என்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர் உண்டு

நீண்ட  இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. எல்லாம் இந்த தலைவா பார்த்த எபக்ட் தான், வழமையா நாமா தான் கிறுக்கல் பதிவு எழுதி மத்தவங்களுக்கு கிறுக்கு பிடிக்க வைக்குறது , அனால்  நம்ம தளபதி சிம்பிள நம்மளையே பால்ட் ஆக்கி கீள்பக்கத்துக்கு அனுப்பிடரைய :P
சரி நாம் வந்த வேலையை பாப்பம்.


என்றென்றும் புன்னகை என் பார்வையில் ...
என்னை அறியாமல் என் கண்களை நனைத்த,
அப்பா மகன் பாசம் - எம் மகன்
நண்பர்கள் பாசம் - நண்பன் 
காதலர்கள் பாசம் - அப்படீன்னா ;)
அனால் இந்த மூன்றையும் கலந்து என்ன மட்டும் இல்லது  என் பக்கத்தில் இருந்த இரும்பு சிங்கத்தையே கரைய வைசுடாங்க இந்த என்றென்றும் புன்னகை பசங்க :)

Friday, March 11, 2011

வீடு விட்டு விடுதி வந்தேன் . . .



பலகை படுக்கைய்யோ பாடிக்கு மெத்தையானது
தாழ்ப்பாழ் இல்லாத கழிவறையே சொர்க்கமானது
தரை இருக்கைகளோ இன்ப இருக்கைகளானது
குளிப்பறைகளோ பிறந்த மேனியை பப்பிளிக்காக்கியது

வாங்கி வைத்த நொருக்கு தினியோ மாயமாய் மறைந்தது
அடுத்தவன் பொருள் எல்லாம் என் பொருளாகியது
ஒரு துளி பேஸ்டும் ஒஇலும் தினசரி கடனானது
இல்லை எனற சொல்லோ காற்றோடு கலைந்து போனது 

நெஸ்ரமோல்டோ நெசசரி பானமானது
பராட்டாவும் பருப்பும் பகல் உணவானது
பஞ்சாமிர்தமோ டெயிலி டெசேட் ஆனது
உழுந்து வடையோ ஆட்டம்மா வடையானது

சிற்றுண்டிச்சாலை கொம்மியூனிட்டி சாலையானது
நண்பர்க்ளுடனான அரட்டை இன்பமானது
அதில் சிலரின் வதையோ  துன்பமானது
நட்புடை சூழ உண்ணும் உணவு அமிர்தமானது

விடுதி வாழ்க்கை இன்பமானது மட்டுமல்ல‌
அது ஒரு வாழ்க்கையையின் படிப்பிடமும் கூட‌ . . .

அஜித் 


Monday, January 17, 2011

பெண் கைதி . . .


ஒரு பெண்ணின் உளம் பேசுகிறது அவள‌து இதயத்திற்காக‌ . . .

பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொள் ஆனால்
என்னை ஓரதில் வைத்து பூட்டும் பூட்டாகிவிடாதே

என் கரங்ளை இறுகப் பறறிக்கொள் அதற்காய்
என் கைகளிற்கு விலங்கிட்டு என்னை நடைபிணமாக்காதே

தினமும் ஆயிரம் ஆயிரம் அன்பு வார்தைகள் கூறு அனால்
இலவச அழைப்பு என்று இருழும்வரை இம்சை செய்யாதே


இறுதியாக ஒன்று கேட்கிறேன் . .
நீ எனை காத்துக்கொள்வாய‌ ஒரு ________ , ஒரு கைதியாக அல்லாமல் . . .


பொதுஇடத்தில் இருந்து,
மதுமகன்.

Wednesday, December 15, 2010

எமனின் மகள்

உன் அழகு கண்டு என் இதயம் அலையுதடி அனால்
உன் உள் அழகு கண்டு இதயம் அழுகுதடி

உன் புன்னகை கண்டு உள்ளம் பூரிக்குதடி ஆனால்
புன்னகையின் பொருள் கண்டு உள்ளம் புண்ணாய் போகுதடி

உன் குரல் கேட்டு என் செவிகள் இசை பாடுதடி அனால்
மெய்யற்ற சொல் கேட்டு செவிகள் செவிடாகுதடி

உன் இதள் காண்டு என் இதள்கள் சினுங்குதடி அனால்
துளி சிந்தும் இரை கண்டு என் இதள்கள் அழுகுதடி

உன் நிழலில் என் உருவம் நிழல் ஆறுமடி அனால்
உரு மாறிப்போகும் என் உரு காண‌ உளம் மறுக்குதடி

இறுதியாய் உனை ஒன்று கேட்கிறேன் பெண்ணே
நீ பிரமனின் வீட்டில் பிறந்த எமனின் மகளா !!


கனவிலிருந்து,
அஜித்

Monday, November 8, 2010

மூடிய அறையில் மூடாத கண்கள்

பகிடிக் கவிதை


பகலை அறியாத மூடிய அறை
சூரியனை உறையவைக்கும் வளிப் பதனம்
இருக்கையை இதமாக்கும் இலேசான‌ இருக்கைகள்
படத்தை பதிக்கும் பளபளக்கும் வெள்ளைத்திரை
முப்பரிமான ஒலியுடன் மூணுமுணுக்கும் முதுநிலை


பிற் பாட்டுப் பாடும் முன் வரிசை உறுப்பினர்கள்
பிறர் பாட்டுப் பாடும் பின் வரிசை உறுப்பினர்கள்
கண்ணை கள‌வாடும் கன்னிப்பெண்கள் கரையினிலே
நம்பி போல் நடுவரிசையில் நாற்காலிகளய் நாங்கள்


முனனால் இருப்பவரோ முற்றும் துறந்தநிலை
பின்னால் இருப்பவரோ பிரம்மையின் உச்சம்
சைட்டில் இருக்கும் சகாக்கள் சரவெடியின் உச்சம்
இவர்கள் நடுவில் கணினி கனவுடன் ஒரு அப்பாவி . . . 



நக்கலுடன் திரை அரங்கின் நடுவே,
அஜித்