Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, June 3, 2020

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

  


கன்பூசியஸ் என்ற சிந்தனையாளன் சீனத்தில் தோன்றி தத்துவம் உதிர்ந்தான்.

தத்துவ ஞானி

சாக்ரடீஸ் கிரேக்கத்தில் பிறந்து வாழ்வியல் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தினான்.

புத்தன் வடக்கில் தோன்றி புத்த மதம் தோன்றிவித்து போதனை செய்தான்.

அந்த காலகட்டத்தில் தொல்காப்பியன் நம் மண்ணில் நடமாடி நம் வாழ்வியல் நாதமான

நம் தமிழ் மொழிக்கு இலக்கியம் வகுத்து இலக்கினம் படைத்தான்.

மேலே கூறிய தத்துவ ஞானிகள் யாவரும் வாழ்வியல் நெறி கூறிய அதே சமயம் நம் தொல்காப்பியன் ஒரு மொழிக்கு இலக்கனம் வகுத்தான் என்றால் தமிழ் மொழி எவ்வளவு பழையது.

எவ்வளவு தொன்மையானது. தமிழன் எப்போது தோன்றினான், தமிழ் நாகரீகம் எப்போது தோன்றியது, தமிழ் மொழி எப்போது பிறந்தது? இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் ஒருவன் எழுதினால் என்றால் எவ்வளவு காலம் முன்னமே தமிழ் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் நாகரீகத்தில் எத்துனை பழமை வாய்ந்தவர்களாக, பண்பட்டவர்களாக இருதிருக்க வேண்டும்.


சல்லடையாக சலித்து,சலித்து

அறிஞர் பெருமக்கள்

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

உலகில் ஆறு மொழியே மிக தொன்மையான மொழி என்று.

அவை கிரேக்கம், லத்தின், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், தமிழ்.


கிரேக்க மொழி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

லித்தினும் எப்போதோ பழக்கத்தில் இல்லாமல் போக , ஹீப்ரூவில் தான் முதன் முதலில் விவிலியம் எழுதினார்கள். இப்போது அந்த மொழியை புதுபித்து கொண்டு இருக்கிறார்கள். சீனம் வட வடிவம் எழுத்துக்களால் ஆனதால் அது கற்பதற்கு மிகவும் கடினம், சமஸ்கிருதம் எழுத்து மொழியே தவிர பேச்சு மொழியாக எங்கும் காணபடவில்லை. இதில் இலக்கியம் இருக்கலாம். தொன்மை இருக்கலாம். ஆனால்

தமிழ் மொழி மட்டுமே இன்றளவும் பேச்சு மொழியாகவும், எழுத்து வடிவமாகவும், பாமரன் முதல் படித்தவன் வரை, காலம்காலமாக கொஞ்சமும் இளமை மாறாமல் உலகம் முழுவதும் கிட்டதட்ட பத்து கோடி மேற்பட்ட மக்களால் பேசபடுகிறது. கொண்டாடபடுகிறது.


இவ்வுலம் எப்படி தோன்றியது.

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான்.

ஆண்டவன் படைத்தான் என்றால் அவன் முதன் முதலில் எதை படைத்தான். எவ்வாறு படைத்தான்.

இப்படி பல கேள்விகள் எழுத்தான் செய்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்.

சூரிய குழம்பில் இருந்து ஒரு சிறிய பகுதி கிழ் நோக்கி விழ , அதன் மேல் பல லட்சம் ஆண்டுகள் மழை பொழிய, விழுந்த குழம்பு குளிர்ந்து பாறையாக மாறி அந்த பாறை வெள்ளத்தில் அடித்து செல்ல, பின் சிறு, சிறு கற்களாக உடைய, அதுவே பின் கரைந்து மண்ணாக மாறியது. அதுவே பூமியாக மாறுகிறது.

அப்போது, தமிழ் எப்போது தோன்றியது.

புரிகிறதா!

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி மட்டும் அல்ல மூத்த மொழி தமிழ். ஆதி மொழி தமிழ்.

தமிழ் வாழ்க, தமிழ் வளர்க.

Monday, December 23, 2013

என்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர் உண்டு

நீண்ட  இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. எல்லாம் இந்த தலைவா பார்த்த எபக்ட் தான், வழமையா நாமா தான் கிறுக்கல் பதிவு எழுதி மத்தவங்களுக்கு கிறுக்கு பிடிக்க வைக்குறது , அனால்  நம்ம தளபதி சிம்பிள நம்மளையே பால்ட் ஆக்கி கீள்பக்கத்துக்கு அனுப்பிடரைய :P
சரி நாம் வந்த வேலையை பாப்பம்.


என்றென்றும் புன்னகை என் பார்வையில் ...
என்னை அறியாமல் என் கண்களை நனைத்த,
அப்பா மகன் பாசம் - எம் மகன்
நண்பர்கள் பாசம் - நண்பன் 
காதலர்கள் பாசம் - அப்படீன்னா ;)
அனால் இந்த மூன்றையும் கலந்து என்ன மட்டும் இல்லது  என் பக்கத்தில் இருந்த இரும்பு சிங்கத்தையே கரைய வைசுடாங்க இந்த என்றென்றும் புன்னகை பசங்க :)

Monday, January 17, 2011

பெண் கைதி . . .


ஒரு பெண்ணின் உளம் பேசுகிறது அவள‌து இதயத்திற்காக‌ . . .

பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொள் ஆனால்
என்னை ஓரதில் வைத்து பூட்டும் பூட்டாகிவிடாதே

என் கரங்ளை இறுகப் பறறிக்கொள் அதற்காய்
என் கைகளிற்கு விலங்கிட்டு என்னை நடைபிணமாக்காதே

தினமும் ஆயிரம் ஆயிரம் அன்பு வார்தைகள் கூறு அனால்
இலவச அழைப்பு என்று இருழும்வரை இம்சை செய்யாதே


இறுதியாக ஒன்று கேட்கிறேன் . .
நீ எனை காத்துக்கொள்வாய‌ ஒரு ________ , ஒரு கைதியாக அல்லாமல் . . .


பொதுஇடத்தில் இருந்து,
மதுமகன்.

Wednesday, December 15, 2010

எமனின் மகள்

உன் அழகு கண்டு என் இதயம் அலையுதடி அனால்
உன் உள் அழகு கண்டு இதயம் அழுகுதடி

உன் புன்னகை கண்டு உள்ளம் பூரிக்குதடி ஆனால்
புன்னகையின் பொருள் கண்டு உள்ளம் புண்ணாய் போகுதடி

உன் குரல் கேட்டு என் செவிகள் இசை பாடுதடி அனால்
மெய்யற்ற சொல் கேட்டு செவிகள் செவிடாகுதடி

உன் இதள் காண்டு என் இதள்கள் சினுங்குதடி அனால்
துளி சிந்தும் இரை கண்டு என் இதள்கள் அழுகுதடி

உன் நிழலில் என் உருவம் நிழல் ஆறுமடி அனால்
உரு மாறிப்போகும் என் உரு காண‌ உளம் மறுக்குதடி

இறுதியாய் உனை ஒன்று கேட்கிறேன் பெண்ணே
நீ பிரமனின் வீட்டில் பிறந்த எமனின் மகளா !!


கனவிலிருந்து,
அஜித்

Monday, November 8, 2010

மூடிய அறையில் மூடாத கண்கள்

பகிடிக் கவிதை


பகலை அறியாத மூடிய அறை
சூரியனை உறையவைக்கும் வளிப் பதனம்
இருக்கையை இதமாக்கும் இலேசான‌ இருக்கைகள்
படத்தை பதிக்கும் பளபளக்கும் வெள்ளைத்திரை
முப்பரிமான ஒலியுடன் மூணுமுணுக்கும் முதுநிலை


பிற் பாட்டுப் பாடும் முன் வரிசை உறுப்பினர்கள்
பிறர் பாட்டுப் பாடும் பின் வரிசை உறுப்பினர்கள்
கண்ணை கள‌வாடும் கன்னிப்பெண்கள் கரையினிலே
நம்பி போல் நடுவரிசையில் நாற்காலிகளய் நாங்கள்


முனனால் இருப்பவரோ முற்றும் துறந்தநிலை
பின்னால் இருப்பவரோ பிரம்மையின் உச்சம்
சைட்டில் இருக்கும் சகாக்கள் சரவெடியின் உச்சம்
இவர்கள் நடுவில் கணினி கனவுடன் ஒரு அப்பாவி . . . 



நக்கலுடன் திரை அரங்கின் நடுவே,
அஜித்

Monday, November 1, 2010

உன் முகவரி தேடி . . .


உன் முகவரி தேடி தேடி என் முகவரி மறந்தேன்
உன் முகவரி எழுதி எழுதி பலகையில் சொற்கள் இழந்தேன்
நீ பல மைல் தூரம் இருந்தும் உன் வருகைக்காய்
விண்ணப்பம் வைத்து உனக்கய் காத்திருக்கும்
இவ் வாசகனுக்காய் உன் இன்முகத்தை என் திரையில் பதிபாயா ??

இப்படிக்கு இனைய பாவனையாளன்
அஜித்

Friday, July 9, 2010

தொடங்கினேன் பதிவை .. நடந்தது என்ன . . .

ஒரு மாதரியாக அடித்து பிடித்து blogஐ தொடங்கி சில பதிவுகளையும் இட்டு விட்டேன். அதை தொடங்கி ஆறு மாதம் ஆகி விட்டத்தி அனால் அடுத்த பதிவை இடத்தான் idea கிடைக்கவில்லை அனால் நேரம் தான் கொட்டி கிடக்கு. முதல் பதிவில் கிடைத்த கமெண்ட்ஸ் எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனாலும் தமிழ் தான் சரியா வரமாட்டேங்குது அதுவும் விசை பலகைஜை பாவித்து அடிப்பது என்றால் ரொம்ப கஜிடமாஜிருக்குது, அதிலும் ஒரு நண்பர் விடுவதாக இல்லை தமிழ் பிழைகளை பூதகண்ணாடி பூட்டு கண்டு பிடித்துவிடுகிறார்.
ஆனாலும் நான் விடுவதாக இல்லை, குறைந்தது ஒரு மாதத்ர்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவு பண்ணை இதை இடுகிரீன். என்னதான் தமிழை பிழை பிழையாக எழுதினாலும் வசிக்கும் பொது எல்லாம் சரியாக விளங்கும். (திருமளைசில் விஜயன் கடிதம் ஜோதிக படித்து போல )

நான் ஒருதடவை சொன்ன நுறு தடவை சொன்னன மாதுரி , நான் ஒரு தடவை எழுதினா மறு தடவை வாசிச்சு பாகக் மாட்டன்.