Monday, May 6, 2013

சூது கவ்வும் நகைச்சுவையின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை பரிமாணங்கள் 
அன்னை வயிற்றில் நடிப்பின் மூலம் என்னை சிரிக்க வைத்தவர் நாகேஷ் 
தவழும் வயதில் "அண்ணே அண்ணே" சொல்லி சிரிக்க வைத்தவர்கள் கௌண்டமணி செந்தில்
"வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!" என்று சொல்லி வளரும் வயதில் சிரிக்க வைத்தவர் வடிவேலு 
அரும்ம்பு மீசை வளரும் வயதில் இரட்டை அர்த்தம் புரிய வைத்து சிரிக்க வைத்தவர் சந்தானம் 

ஆனால் காலம் பல கடந்துடுச்சு, நாலு கழுதை வயசாச்சும் ஆயிடுச்சு.. புதுசா ஒன்னும் தமிழ் சினிமாவில காணல்ல என்ற ஏக்கத்தை தணிக்க வந்தவங்க தான் இந்த குறும்பட இருக்குனர் சிகரங்கள், 

நாளைய இயக்குனர் ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் இவர்களின் பரம ரசிகன் அதிலும் நலன் குமாரசாமியின் ஒவ்வொரு குறும் படத்தின் ஒவ்வொரு  கட்சியும் நகைச்சுவை சொல்லும். 

சூது கவ்வும் முன்றே வரியில் 
  • நடிகர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு கட்சிகளும் நகைச்சுவை பேசலாம் என்று  புரிய வைக்கின்ற  படம்,
  • பழைய இசைக்கு இப்படியும் புது வடிவம் கொடுக்கலாம் என்று புரிய வைக்கின்ற  படம்,
  • ஒவ்வொரு ரசிகர்களின் அழுகைக்கு பின் சிரித்து மருந்து கொடுக்கலாம் என்று  புரிய வைக்கின்ற  படம்,

நாளைய இயக்குனரில் இருந்து நலன் குமாரசாமியின் ஒரு குறும்படம் 









Saturday, February 23, 2013

விஸ்வரூபம் விமச்சனம், தடைகளை தாண்டி . . .


வழமையா ஒரு படத்துக்கு இறங்க்கிட்டமண்டா அந்த படத்தி போட்டு கிழிக்குறது அல்லது தலையில தூக்கிவைச்சு ஆடுறதுதான் நம்ம பிழைப்பு. அனா இந்தத்முறை விஸ்வருபத்தை பாத்துப்புட்டு வய பொத்திக்கிட்டு இருக்கன். அதுவும் ஒரு நாளோ இரண்டு நாளோ இல்லை இரண்டு வருசமா, எல்லாம் ஏனைய  இணைய தோழர்களின் நொந்த கதைய கேட்டுதான். அனாலும் ஒருக்கா எழுதி பார்ப்பம் எண்டு எழுத வந்துட்டன்,



உண்மையை சொல்லன்னுமேண்ட படத்தை பற்றி சொல்லுறதுக்கு ஒன்னுமிலேங்க. ஏன்னு கேட்கிறீங்களா, ஏன்னா எனக்கு இன்னும் படமே புரியல்லேங்க. என்னதான் நம்ம ஹொலிவூட் தம்பி கிறிஸ்டோபர் நோலன் எடுத்த இன்சப்சனை கப்புண்ணு புரிஞ்சுகிட்ட நம்ம  கபாலம் நம்ம உலக நாயகன் எடுத்த படத்தோட கதையையும் கதாபதிரங்களையும் இரண்டு நாள் ரூம் போடு கூட கண்டுபிடிக்கமுடியல்லேங்க . இதைதான் அவரு முதல்லையே "இது தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான படமாயிருக்கும்" எண்டு சொன்னாரோ தெரியல்ல. 
அனால் என்னதான் படத்தோட கதை விளங்காமல் கபாலத்தை போட்டு சொறிஞ்சுக்கிட்டு சினிமா கொட்டகையில இருந்தாலும், படத்தோட 147 நிமிசத்தையும் அற்புதமா செதுக்கியிருக்காரு நம்ம நாயகன்.
அதில நம்மோட வந்த கூட்டாளி சொல்லுறாரு, படத்தோட ஒவ்வொரு  ஃப்ரேமும் சும்மா பிக்காசோ ஓவியம் போல பிரமிக்க வைக்குதையா, அதிலையும் குறிப்பா படம் முடிஞ்சு வார சீன்ல பட்டைய கிளப்பிடாரைய நம்ம நாயகன். 


Monday, January 14, 2013

கண்ணா பவர் ஸ்டார் லட்டு தின்ன ஆசையா


பொங்கலை நல்லா கொட்டியாச்சு, சரி ஒரு படத்துக்கு இறந்குவமண்டு பார்த்த நம்ம பருத்திவீரன் அலெக்ஸ் பாண்டியன் வந்து அடுத்தநாளே பாடையில படுத்திட்டாரூ, லட்டு மட்டும் பல்லாகில போகுதெண்டங்க.


யார் இந்த பவர் ஸ்டார் , எப்படி பாவரே இல்லாமல் இப்படி பவர்புல்ல பட்டையை கிளப்புறார் . சரி அத விடுங்க நாம இப்ப நம்ம பவர் ஸ்டார் நடித்து கலக்கிய கண்ணா லட்டு தின்ன ஆசையா லட்டை கொஞ்சம் ருசி பார்ப்பம்.

இதபடத்தை பார்க்க போய் மூணு தாடப ஹார்ட் அட்டாக் அயிடிச்சு , என்னடா மூணு  தடாப ஆகியும் என்னும் இருந்து ப்ளாக் எழுதி உங்களை கொல்லுறான் எண்டு தானே யோசிகிரியள் ,அதுதான் இந்த லட்டின் அதிசயம்.

அட்டாக் 1. 
வழமையா சினிமா கொட்டைகுள்ள போன எல்லாம் நம்ம இனம்தான், கண்ணெல்லாம் வறண்டு போய் இருக்கும், நம்ம சூர்யா படப்புள்ள படம் ஏன்டா கொஞ்சம் அங்கயும் இங்கயுமா சுமார இருக்கும். ஆனா நம்ம லட்டு பவர் ஸ்டார் சூர்யா பயபுல்லையையே போட்டு நசுகிட்டருல்ல, கொட்டகையே ரொம்ப செழிப்பா இருதுச்சையா. அப்ப லைட்டா ஹார்ட்டு ஷேக் ஆச்சு.

அட்டாக் 2. 
நான் ரஜினி,விஜய், அஜித்தோட என்ட்ரியை பார்த்திருக்கன் ஏன் நம்ம சாம் அண்டரசனோட என்ட்ரியை கூட பார்த்திருக்கன் ஆனா நம்ம பவர் ஸ்டார் என்ட்ரி மாதிரி எங்கயுமே பார்த்ததில்லையா அஜ்ஜைஜோ அஜ்ஜைஜோ மத்தவங்க எல்லாம் பிச்சை எடுக்கனுமைய. நம்ம பவர் ஸ்டார் நடையென்ன தொப்பையென்ன காந்தர்வப் பார்வைஜென்ன பல்லென்ன அப்பப்பா, அதை பார்த்து வாய பிளந்தவன் தான் லைட்டா ஹார்ட்டும் பிளந்துட்டு போல. 

அட்டாக் 3. 
என்னதான் சந்தானம் மொக்கை போட்டு நம்மல சிரிக்க வைத்தாலும், நம்ம  பவர் இல்லாட்டி சந்தானமும் சாத்துபொடிதான். ஒவ்வொரு பவர் ஸ்டார் சீனும் 10000W. ஹஹபுவ ஹஹபுவ எண்டு கொட்டகையே பிளக்கிறளவுக்கு சிரிப்பொலி. அதிலையும் நமக்கு பக்கத்தில இருந்த தோஸ்த்து ஒருபடி மேல போயிட்டன், அவன்  விழுந்து விழுந்து சிரிச்ச சிரிப்பில சுத்திருந்தவங்க 10 பேர் மண்ட காலி, அவ்வளவுக்கு பவர் ஸ்டாரை பாத்து பவர் ஆகிட்டான்.

இந்த பவாரை பாத்து மூனாவது அட்டாக் , ஆனா சிரிச்ச சிரிப்பில ஹார்ட் strong அகிடுசு நம்ம பவர் ஸ்டார்  நம்மள காப்பத்திடாரு.

இம்ம்புட்டு பவர் கொண்டவர் ஸ்டார் தான் நம்ம பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இன்று முதல் நான் பவர் ஸ்டார் ரசிகன்.

வாழ்க வரும்கால அமெரிக்க ஜனாதிபதி பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.


Sunday, December 23, 2012

நீ தானே என் பொன் வசந்தம் . . .

வழமையா வாசுதேவன் படம் ஏன்டா வந்த நாளே இறங்கிடுவம் அனால் இந்தமுறை ஏனோ திருட்டு VCD வாங்கி பாக்கிரதுக்கே தோணல்ல.அதிலும் நம்மளுக்கு ஓவர் லவ் ஸ்டோரி கதையெண்டாலே கொஞ்சம்  கஷ்டம்( காதல் கசக்குதைய்யா வரவர . .)  ஆதலால் 1000 சொற்கள் கொண்ட கட்டுரை எழுதபோறல்ல, Only சிறு வரிகள் ...


  • உலகில் முதல்முறையாக 150 நிமிஷ படத்தில 1500 நிமிஷதுக்கு பாட்டு  
  • தாலாட்டும் இளையராஜாவின் இசை காதை துளை போடுகிறது
  • சமந்தா ஒரு அழகான பாவனையுடன் கூடிய அழகான பொன்னு, 
  • ஜீவாவின் லவ் story ஐ விட சந்தானத்தின் லவ் சேட்டைகள் அற்புதம் 
  • சினமா கொட்டகையில் ஆங்காங்கே கொட்டாவியுடன் சேர்ந்த கொறட்டை சத்தம் 
  • படத்தின் முடிவு இப்படிதான் முடியும் எண்டு தெரிந்தாலும் அதை முடித்த விதம் அழகோ அழகு.

கடைசியா ஒன்னு சொல்லன்னுமையா,  நாம்மா  தமிழ் சினிமா நல்லா வளதுடிசையா, நல்லா தாராளமா காட்டுன்கையா  நாமா ஒன்னும் தப்பா நைக்கமாடமையா . எவ்வளவு காலம்தான்   நாங்களும் பின்தலையை மட்டும் பாக்குறது :D 

Thursday, November 15, 2012

துப்பாக்கியும் என் டவுசரும் . . .

இது துப்பாக்கி திரைப்பட விமர்சனம் அல்ல, துப்பாக்கி படம் பார்க்க போன கதை  . . .


"மாப்பிள்ல துப்பாக்கி படம் ரிலீஸ் ஆயிடுச்சாண்டா . . " எண்டு கேட்டதுதான் போதும் நம்மட பெடியள் எல்லாம் ஒரு கனத்தில பறந்துட்டங்கள். எங்க படத்தை பக்கதானே  எண்டு நினைப்பியள் ,

ஹீ ஹீ ஹீ அதுதான் இல்ல. எங்க வலுக்கட்டயமா கடத்திக்கிட்டு போய் துப்பாக்கியை பார்க்கவைச்சு பாடையை கட்டிடுவானோ ஏன்டா பயத்தில நம்ம்ம பொடியள் எல்லாம் தீபாவளி பட்டாசு மாதிரி ஒரு கணத்திலேயே சிதறி ஓடிடங்கள். ஆனாலும் நாம விடுறமாதி இல்ல, ஒரு மாதிரி ஒரு அப்பிரானிய கண்டுபுடிச்சு அவனை பலியாடு மாதிரி இழுத்துக்கிட்டு பைக்கில டபுள்  போட்டுக்கிட்டு கொட்ட்டகைக்கு போயிட்டமல்ல.



சரி நம்ம பெடியள் மாதிரியே  எல்லா பசங்களும்  துப்பாக்கிக்கு பயந்து வீட்டிலையே நடுங்கி கிட்டு இருப்பாங்க அப்புறம் என்ன சினிமா கொட்டகையில நாம தான் ராசா எண்டு போய் பார்த்த எதோ ஓசில ஒரு கிலோ தங்கம் அள்ளிக்கிட்டு போக நாடே திரண்ட மாதிரி அப்படி ஒரு கூட்டம். லைன் எண்டாலோ கோழும்பில தொடங்கி யாழ்பாணம் வரைக்கும் போகுதையா. ஒருகணம் அப்படியே ஷாக் அயிட்டேன்.

நாம நேர் ரோட்டில போய் டிக்கெட் எடுக்கனுமென்ன யாழ்ப்பாண கோடி  வரைக்கும் போய்த்தான் நிக்கணும். அது சரி வராதுண்டு சோர்ட் ரூட்ல தலைய உள்ளுக்க விடலாம் எண்டு பார்த்த ஊசியையே உள்ள விட முடியல்ல. இனி இது சரிவராது நாம காளையா மாறி இடிச்சுக்கிட்டு உள்ளே பூர வேண்டியதுதான் எண்டு ஹெல்மேட போட்டுட்டு நம்ம பவர் ஸ்டார் மாதிரி  எல்லாத்தையும் ஒரு காட்டு காட்டிகிட்டு  உள்ளே போயிட்டு திரும்பி பாத்த ஒரு இஞ்சி தான்னையா உள்ளே போயிருக்கேன்.

 சரி இதே ஒரு பெரிய வெற்றி தானே எண்டு பெருமையா நிமிந்து பார்க்கிறன் நம்ம அப்பிரானி புள்ள டிக்கெட் வாசல்வரைக்கும் போயிட்டன். அஹா இது நம்மளுக்கு பெரிய அவமானமாச்சே எண்டு முன்னுக்கு நிக்குறவன்ட கை கால் தலை எல்லாத்தையும் நசுக்கி பிழிஞ்சு ஒரு மாதிரியா டிக்கெட் கௌண்டர்ல போய் நிண்டு பக்கட்டில கையை விட்டு பாக்கிறன் பக்கட்ட காணல்ல,  என்னயா  இது அதிசியம் எண்டு கீழ பார்த்த நம்ம டவுசெர் யாரோ உருவிட்டான்.  நல்ல காலம் டபுள் டவுசெர் சொருகிக்கிட்டு வந்ததால மானம் தப்பிச்சு. அப்புறம் என்ன டவுசெரை எடுத்து சொருகிக்கிட்டு சினிமா கொட்டகைக்குக்ள்ள நாம்ம அப்பிராணி பயபுள்ளகூட அவசரம் அவசரமா புகுந்ததுதான்.



ஐயா சாமி ப்ளாக் முடிஞ்சுது, போயிட்டு அப்புறமா துப்பாக்கியும் கிழியாத டவுசரும்  ப்ளாக் எழுதும்போது வாங்கையா . . .


Saturday, April 28, 2012

அப்படி கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் என்னதான் வேலை பார்பாங்க‌?



"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"


- படித்ததில் பிடித்தது - 

Thursday, September 22, 2011

நற் சிந்தனைகள் . . .





உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது.
-தாயுமானவர்-
உங்களுடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடியுங்கள். அடுத்தவர்களிடம் குணங்களை மட்டும் தேடுங்கள். அவர்களது குறைகளை பெரிதுபடுத்துதல் பாவமாகும்.
-சத்யசாய் -

நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.

-காந்திஜி -

ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

-பைபிள் -

ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.

-புத்தர்-