Thursday, September 22, 2011

நற் சிந்தனைகள் . . .





உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது.
-தாயுமானவர்-
உங்களுடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடியுங்கள். அடுத்தவர்களிடம் குணங்களை மட்டும் தேடுங்கள். அவர்களது குறைகளை பெரிதுபடுத்துதல் பாவமாகும்.
-சத்யசாய் -

நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.

-காந்திஜி -

ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

-பைபிள் -

ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.

-புத்தர்-

வந்தான் கொ(வொ)ன்றான்



ஜீவாவின் சமீப கால வெற்றிகள் கண்ணனின் கண்டேன் காதலின் உண்ர்வும் புடைசூழ‌ சில நண்பர்க்ளுடன் ரொம்ப எதிர்பார்ப்புடன் திரை அரங்ககுக்கு இறங்கினான் இந்த நொந்துபோனவன் ... 

திரை அரங்கின் வாசலிலேயே முதல்லவது அதிர்ச்சி,
டிச்கெட்க்காக 150ஐ நீட்ட தம்பி 250 தாங்க என்டார் counter சரி நம்ம ஜீவா படதுக்கு 250 என்ன 1000 கூட குடுக்கல்லம் என்டு சந்தோசம உள்ளுக்கு போன 

இரண்டாவது அதிர்ச்சி,
நம்மையும் சேர்த்து மொத்தமா 10 பேர் தான், சரி பரவாயில்லை வந்தனாங்க கொஞசம் காத்தோட்டம படதை பாப்பம் என்டு இருந்துட்டு கண்ணமூடிக்கண்ண திறந்து பாக்கிற‌ன் படம் முடிசுட்டு என்டு எல்லாரும் போராங்க. என்னடா இது என்டு குழப்பி கொண்டு வெழியாலவர ஒருதன் சொல்லுறான்,

"மச்சான் இந்த situationசனிலும் கொறட்டை விட்டு நித்திரை கொள்ளுறியே நீ ரொம்ப கொடுது வைச்சவண்ட" எண்டான் . . . . .

என்ன செய்ய எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.