தமிழ் சினிமாவின் நகைச்சுவை பரிமாணங்கள்
அன்னை வயிற்றில் நடிப்பின் மூலம் என்னை சிரிக்க வைத்தவர் நாகேஷ்
தவழும் வயதில் "அண்ணே அண்ணே" சொல்லி சிரிக்க வைத்தவர்கள் கௌண்டமணி செந்தில்
"வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!" என்று சொல்லி வளரும் வயதில் சிரிக்க வைத்தவர் வடிவேலு
அரும்ம்பு மீசை வளரும் வயதில் இரட்டை அர்த்தம் புரிய வைத்து சிரிக்க வைத்தவர் சந்தானம்
ஆனால் காலம் பல கடந்துடுச்சு, நாலு கழுதை வயசாச்சும் ஆயிடுச்சு.. புதுசா ஒன்னும் தமிழ் சினிமாவில காணல்ல என்ற ஏக்கத்தை தணிக்க வந்தவங்க தான் இந்த குறும்பட இருக்குனர் சிகரங்கள்,
நாளைய இயக்குனர் ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் இவர்களின் பரம ரசிகன் அதிலும் நலன் குமாரசாமியின் ஒவ்வொரு குறும் படத்தின் ஒவ்வொரு கட்சியும் நகைச்சுவை சொல்லும்.
சூது கவ்வும் முன்றே வரியில்
- நடிகர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு கட்சிகளும் நகைச்சுவை பேசலாம் என்று புரிய வைக்கின்ற படம்,
- பழைய இசைக்கு இப்படியும் புது வடிவம் கொடுக்கலாம் என்று புரிய வைக்கின்ற படம்,
- ஒவ்வொரு ரசிகர்களின் அழுகைக்கு பின் சிரித்து மருந்து கொடுக்கலாம் என்று புரிய வைக்கின்ற படம்,
நாளைய இயக்குனரில் இருந்து நலன் குமாரசாமியின் ஒரு குறும்படம்
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...