Monday, November 8, 2010

மூடிய அறையில் மூடாத கண்கள்

பகிடிக் கவிதை


பகலை அறியாத மூடிய அறை
சூரியனை உறையவைக்கும் வளிப் பதனம்
இருக்கையை இதமாக்கும் இலேசான‌ இருக்கைகள்
படத்தை பதிக்கும் பளபளக்கும் வெள்ளைத்திரை
முப்பரிமான ஒலியுடன் மூணுமுணுக்கும் முதுநிலை


பிற் பாட்டுப் பாடும் முன் வரிசை உறுப்பினர்கள்
பிறர் பாட்டுப் பாடும் பின் வரிசை உறுப்பினர்கள்
கண்ணை கள‌வாடும் கன்னிப்பெண்கள் கரையினிலே
நம்பி போல் நடுவரிசையில் நாற்காலிகளய் நாங்கள்


முனனால் இருப்பவரோ முற்றும் துறந்தநிலை
பின்னால் இருப்பவரோ பிரம்மையின் உச்சம்
சைட்டில் இருக்கும் சகாக்கள் சரவெடியின் உச்சம்
இவர்கள் நடுவில் கணினி கனவுடன் ஒரு அப்பாவி . .



நக்கலுடன் திரை அரங்கின் நடுவே,
அஜித்

No comments:

Post a Comment