Wednesday, December 15, 2010

எமனின் மகள்

உன் அழகு கண்டு என் இதயம் அலையுதடி அனால்
உன் உள் அழகு கண்டு இதயம் அழுகுதடி

உன் புன்னகை கண்டு உள்ளம் பூரிக்குதடி ஆனால்
புன்னகையின் பொருள் கண்டு உள்ளம் புண்ணாய் போகுதடி

உன் குரல் கேட்டு என் செவிகள் இசை பாடுதடி அனால்
மெய்யற்ற சொல் கேட்டு செவிகள் செவிடாகுதடி

உன் இதள் காண்டு என் இதள்கள் சினுங்குதடி அனால்
துளி சிந்தும் இரை கண்டு என் இதள்கள் அழுகுதடி

உன் நிழலில் என் உருவம் நிழல் ஆறுமடி அனால்
உரு மாறிப்போகும் என் உரு காண‌ உளம் மறுக்குதடி

இறுதியாய் உனை ஒன்று கேட்கிறேன் பெண்ணே
நீ பிரமனின் வீட்டில் பிறந்த எமனின் மகளா !!


கனவிலிருந்து,
அஜித்

Monday, November 8, 2010

மூடிய அறையில் மூடாத கண்கள்

பகிடிக் கவிதை


பகலை அறியாத மூடிய அறை
சூரியனை உறையவைக்கும் வளிப் பதனம்
இருக்கையை இதமாக்கும் இலேசான‌ இருக்கைகள்
படத்தை பதிக்கும் பளபளக்கும் வெள்ளைத்திரை
முப்பரிமான ஒலியுடன் மூணுமுணுக்கும் முதுநிலை


பிற் பாட்டுப் பாடும் முன் வரிசை உறுப்பினர்கள்
பிறர் பாட்டுப் பாடும் பின் வரிசை உறுப்பினர்கள்
கண்ணை கள‌வாடும் கன்னிப்பெண்கள் கரையினிலே
நம்பி போல் நடுவரிசையில் நாற்காலிகளய் நாங்கள்


முனனால் இருப்பவரோ முற்றும் துறந்தநிலை
பின்னால் இருப்பவரோ பிரம்மையின் உச்சம்
சைட்டில் இருக்கும் சகாக்கள் சரவெடியின் உச்சம்
இவர்கள் நடுவில் கணினி கனவுடன் ஒரு அப்பாவி . .



நக்கலுடன் திரை அரங்கின் நடுவே,
அஜித்

Monday, November 1, 2010

உன் முகவரி தேடி . . .


உன் முகவரி தேடி தேடி என் முகவரி மறந்தேன்
உன் முகவரி எழுதி எழுதி பலகையில் சொற்கள் இழந்தேன்
நீ பல மைல் தூரம் இருந்தும் உன் வருகைக்காய்
விண்ணப்பம் வைத்து உனக்கய் காத்திருக்கும்
இவ் வாசகனுக்காய் உன் இன்முகத்தை என் திரையில் பதிபாயா ??

இப்படிக்கு இனைய பாவனையாளன்
அஜித்

Sunday, September 26, 2010

நேற்று-இன்று-நாளை

நேற்று சொன்னது நடந்ததை மற
இன்று சொல்கிறது நடப்பதை கவனி
நாளை சொல்லும் நடக்கப்போவதை யோசி
 
மனம் சொல்கிறது இன்றை நம்பு . . .


Friday, July 9, 2010

தொடங்கினேன் பதிவை .. நடந்தது என்ன . . .

ஒரு மாதரியாக அடித்து பிடித்து blogஐ தொடங்கி சில பதிவுகளையும் இட்டு விட்டேன். அதை தொடங்கி ஆறு மாதம் ஆகி விட்டத்தி அனால் அடுத்த பதிவை இடத்தான் idea கிடைக்கவில்லை அனால் நேரம் தான் கொட்டி கிடக்கு. முதல் பதிவில் கிடைத்த கமெண்ட்ஸ் எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனாலும் தமிழ் தான் சரியா வரமாட்டேங்குது அதுவும் விசை பலகைஜை பாவித்து அடிப்பது என்றால் ரொம்ப கஜிடமாஜிருக்குது, அதிலும் ஒரு நண்பர் விடுவதாக இல்லை தமிழ் பிழைகளை பூதகண்ணாடி பூட்டு கண்டு பிடித்துவிடுகிறார்.
ஆனாலும் நான் விடுவதாக இல்லை, குறைந்தது ஒரு மாதத்ர்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவு பண்ணை இதை இடுகிரீன். என்னதான் தமிழை பிழை பிழையாக எழுதினாலும் வசிக்கும் பொது எல்லாம் சரியாக விளங்கும். (திருமளைசில் விஜயன் கடிதம் ஜோதிக படித்து போல )

நான் ஒருதடவை சொன்ன நுறு தடவை சொன்னன மாதுரி , நான் ஒரு தடவை எழுதினா மறு தடவை வாசிச்சு பாகக் மாட்டன். 

Sunday, February 7, 2010

கன்னிக் கவிதையாம் ..


தமிழாம் வெட்கமாம் பற்றாம் 
ஒருவர் தொடகிவிட்டார் பதிவு எழுத‌ 
அது யாருமல்ல தனது கன்னி கவிதையாம் என 
பெருமையடித்து வெட்டிவீழ்த்தும் இம்மானிதர்தான்.  

பதிவெழுதலின் தகமை வெட்டியாம்மென கேட்டாராம் 
உடனே தொடங்கிவிட்டார் தனது தமிழ் பதிவை 
ஆனால் இம் மனிதருக்கு தெரியவில்லை வெட்டியுடன் 
கொஞ்சம் மசாலாவும் மன்டையில் இருக்க வேண்டுமென்று.

எடுத்தாராம் பேனையை தொடுத்தாராம் வார்த்தையை 
பிறந்ததாம் தனது கன்னி கவிதையென புலம்பினார் 
ஆடிய காலும் பாடிய வாயும் சும்ம இறுக்காதது போல 
இவரும் சும்மாயிருக்காமல் போட்டாராம் பதிவை இணையத்தில்.

பதிவை இட்டதும் பார்கணுமே எவரது கூத்தாட்டதை 
மனதில் பூரிப்பு வாயில் சிரிப்பு .. ஐய்யோ ஐய்யோ  

பின்ணூடல்களின் விளைவை அறியாத இம் மனிதனின் கதி ... 
 கோவிந்தாவோ கோவிந்ததான் ..  

அஜித்

Wednesday, January 27, 2010

குறளுடன் எனது பதிவை ஆரம்பிக்கின்றேன் ...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது'





Tuesday, January 26, 2010

எனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....


எனது தாய்மொழி தமிழாக இருந்தும் எனது தமிழில் துய்மை இல்லை எனது மொழி நடையில் ஒழுக்கம் இல்லை. இது தொடங்கியது என்று நான் எனது கால் தடம் பல்கலைக்கழகம் பாதித்ததோ அன்று இழந்தேன் எனது தமிழின் துய்மையை. 
இன்று முதல் ஆரம்பமான இப் பதிவு எனது மனதில் தோன்றும் கற்பனைகளையும் எண்ணங்களையும் வெளிக்கொணரும் முகமாக அமையும்.